BREAKING NEWS

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

சங்கரன்பந்தலில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பூமி பூஜை:- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி – இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

 

 

இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த பல கிராமமக்களின் புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அந்தப் பாலத்தை இடித்து அங்கு நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

 

 

இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், ஒப்பந்ததாரர் பழனிவேல், டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் கோபி கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பகவதி, லெனின் மேசாக் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS