BREAKING NEWS

சங்கரன்பந்தல் கடை வீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

சங்கரன்பந்தல் கடை வீதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

சங்கரன்பந்தலில் காவல்துறையினர் அணிவகுப்பு..

 

மயிலாடுதுறை மாவட்டம், சங்கரன்பந்தல், ஆயப்பாடி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொறையார் காவல்துறையினர் அணிவகுப்பு நடைபெற்றது.

 

 

பொறையார் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அணி வகுப்பு நடத்தினர்.

 

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வசந்தராஜன், மயிலாடுதுறை குற்றவியல் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயபாலன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ், சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், செல்வி,

செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் அணி வகுப்பு சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து இலுப்பூர் மாரியம்மன் கோவில் வரை சென்று நிறைவடைந்தது.

 

அதேபோல் ஆயப்பாடியில் நடைபெற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு திருக்களாச்சேரி மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயப்பாடி கடைவீதி வரை நடைபெற்றது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )