சங்கரன் கோவிலில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலைப் தொடர்ந்து ஒட்டு மொத்த கும்பலையும் போலீசார் பிடித்தனர். இது தொடர்பாக 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே களப்பாகுளம் அருகே சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 காரர்களை சோதனையிட்டபோது காருக்குள் கட்டு கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் ஈரோடு, காப்பாடி,, வேலூர், அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (49) சந்தோஷ்,(32),சிராஜ்கரிம் (44) வீரபத்ரன் ((34), ஜெகதீஸ் (38) ஈரோட்டைச் சேர்ந்த வளர்மதி(42), கிருஷ்ணவேணி (23)சிவக்குமார் ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 38 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளையும், ரொக்கம் ரூ 2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது மேலும் 6 பேருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இன்று சீனிவாசன், அய்யனார், ஞானசேகர், செந்தில்குமார், பூபதி, முத்துமாரி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்களுக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர். இதுவரை கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்தனர். 4 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கள்ளநோட்டு கும்பலையும் போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.