BREAKING NEWS

சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!

சட்டவிரோதமாக  கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக அமுதா கருவுற்றார், கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கடந்த 17ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூரில் உள்ள தனியார் மருந்தகத்துக்குச் சென்று ஸ்கேன் செய்துள்ளார்.

 

அந்த மருந்தக உரிமையாளர் கருவில் உள்ளது பெண் குழந்தை என்று அமுதாவிடம் கூறினார், இதனால் மூன்றாவது குழந்தையும் பெண் என்பதால் குழந்தையை பெற்றெடுக்க விரும்பாத அமுதா மருந்தக உரிமையாளரிடம் கருக்கலைக்க கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து மருந்தக உரிமையாளர் கருக்கலைப்பதற்கு உண்டான மாத்திரைகளை அமுதாவிடம் கொடுத்துள்ளார்., அதனை வாங்கி சாப்பிட்ட அமுதா வேப்பூர் அடுத்துள்ள நிராமணி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று அங்கு இரு நாட்கள் தங்கி உள்ளார்.

 

இந்நிலையில் நேற்று மாலை அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமுதாவை சிகிச்சைக்காக உடனே அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அப்போது அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர், இதனிடையே அமுதாவின் உடலை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில் அமுதாவிற்கு சட்டவிரோதமாக கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்த்து கூறியது, தொடர்பாக அம்மருந்தகத்தின் உரிமையாளரான கள்ளக்குறிச்சி மாவட்டம் விளந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்த வடிவேல் வயது 45 என்பவரை கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் நந்தகோபால் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்து வேப்பூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம் தலைமையான போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

பின்னர் அவரை வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் சீனு பாபு ( பொறுப்பு ) விசாரித்து வருகிறார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )