BREAKING NEWS

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்.

சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகான மாணாக்கர்கள் சேர்க்கை அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் 05.08.2022 முதல் நடைபெற உள்ளது சேர்க்கைக்கு வரும் மாணாக்கர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன,

மாணாக்கர்கள் பெயர். சேர்க்கை தேதி. தரவரிசை பட்டியல் ஆகியவை www.gascsathy.ac.in என்ற கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கலந்தாய்வுக்கு வருகிற மாணாக்கர்கள் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வருகைதர வேண்டும்,

கலந்தாய்வுக்கு வரும் மாணாக்கர்கள் கல்வி சான்றிதழ். ஜாதி சான்றிதழ். ஆதார் அசல் மற்றும் நகல். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவை அவசியம் கொண்டு வர வேண்டும் என கல்லூரியின் முதல்வர் முனைவர் க.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )