சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துண ஊழியர்கள் சங்கம் மற்றும் திமிரி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் தக்ஷிணாமூர்த்தி, தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், முன்னிலை வகித்தார். செயலாளர் பிரவீனா, வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சத்துணவு ஊழியர் மாவட்டத் தலைவர் சீனிவாசன், கலந்துகொண்டு பள்ளியில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் கொண்டு செயல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹6750 வழங்கிட வேண்டி, ஒன்றியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சத்துணவு நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் தணிகைவேல் நன்றி கூறினார்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஷானாவாஸிடம் கோரிக்கை மனுக்களை வழங்கப்பட்டன.