சந்திரபாடியில் கடல் நீர் உட்புகுந்தது- 900 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கடலோர மீனவ கிராமமான சந்திரபாடியில் கடல்நீர் உட்புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கடைக்கோடி கிராமமான சந்திரபாடியில் 2500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
மீன்பிடித்தொழிலை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத்தில் மழை வெள்ளம், புயல் ஏற்படும் போதும், கடல் சீற்றமாக காணப்படும் காலங்களில் கடல் நீர் உட்புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருவது வாடிக்கையாக நடைப்பெறும் சூழலில் மாண்டஸ் புயல் காரணமாக வியாழன் இரவு முதல் கடல் சீற்றம் அதிகமாகி 15 அடிக்கும் மேல் அலை எழும்பி கிராமத்திற்குள் அதிகளவில் கடல் நீர் புகுந்ததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி அவதியடைந்து வருகின்றனர்.
தகவல் அறிந்த செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் 900தருக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பால் பிரட் மற்றும் உணவு தண்ணீர் வழங்கினார். இதில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் அப்துல் மாலிக், குத்தால மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், செம்பை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சடகோபன், தரங்க பேரு திமுக இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் பாரி.சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் பல உடன் இருந்தனர். ஒன்றிய பெருந்தலைவரிடம் மீனவ கிராம மக்கள் கூறியது.
கடல் சீற்றம் முற்றிலுமாக குறைந்தால் மட்டுமே கடல்நீர் உட்புகாது. சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், தங்கள் பகுதியில் கடல் சிற்றத்தின்போது கடல் நீர் உட்புகுந்து பாதிக்கப்படுவதாகவும் சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் கூறுவதோடு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென்றும் முகத்துவாரத்த் தூர்வாரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.