சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர கிராமமான சந்திரபாடியில் உலக புவி நாளையொட்டி நேச்சுர் என்விரோன்மென்ட் அண்ட் வில்டிஃபி சொசைட்டி (NEWS) என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்கிற விழிப்புணர்வு பேரணி ஊராட்சிமன்ற தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
சந்திரபாடி அரசினர் உயர் நிலை பள்ளி அருகிலிருந்து துவங்கிய பேரணியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள், கிராம பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தடைந்தனர்.
முன்னதாக அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு பலகையையும், அமைப்பின் பலகையையும் ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்.
சிறுவர்கள் மற்றும் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் (NEWS ) ஒன்றிணைந்து அலையாத்தி காடுகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் அலையாத்தி காடுகள் சந்திக்கும் ஆபத்துகள் பற்றி நியூஸ் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி மற்றும் வாழ்வாதார மேம்பாடு அதிகாரி எஸ்.அந்தோணிசாமி, பள்ளியின் தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினர்.
அலையாத்தி காடுகள் வளர்ப்பில் கிராம மக்களின் பங்களிப்பு மற்றும் கிராமத்திற்கும், நாட்டிற்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.