BREAKING NEWS

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 520 கிராம் தாலிக்கு தங்கம்,

 

மற்றும் ரூ.32,25,000/- மதிப்பிலான திருமண நிதி உதவியையும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

 

 

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ச.உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய்; அலுவலர் சோ.முருகதாஸ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் காமாட்சி மூர்த்தி (மயிலாடுதுறை), மகேந்திரன் (குத்தாலம்), சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி, சமூக நலத்துறை அலுவலர்(பொ) சுசீந்ராதேவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS