சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு, பூட்டை , ஊராங்கனி, மல்லாபுரம் முரார்பாளையம் கீழ் பட்டு மஞ்சபுத்தூர் வட சிறுவள்ளூர் தேவ பாண்டலம் எஸ் குளத்தூர், ஆரூர்,வரகூர் கிடனங்குடையான்பட்டு உள்ளிட்ட பதினைந்து கிராமங்களில் 5 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் 4-பள்ளி கட்டிடங்கள் மற்றும் 3 நூலக கட்டிடங்கள் என மொத்தம் 38 கட்டிடங்களைத் திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து திறந்து வைத்தார்.
இரண்டு நாட்களில் 38 அரசு கட்டிடங்களை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருக்கும் 15 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் விழாவில் பேசிய சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதய சூரியன் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒன்றிய பகுதியை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி நம் தமிழக அரசு அதிகளவில் கொடுக்கின்ற வரிப்பணத்தை வாங்கிக் கொண்டுமிகக் குறைந்த நிதியை கொடுக்கிறார்கள்பல்வேறு ஒன்றிய அரசு நலத்திட்டங்களில் தமிழக அரசை புறக்கணிக்கிறார்கள்ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நம் திராவிட மாடல். நாயகன் தளபதி தமிழக முதல்வர் அவர்கள் ஊர் பகுதியில்பாகுபாடு இல்லாமல் இரண்டு பகுதிக்கும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி,ஒன்றிய அரசு தருகின்ற நிதியை விட இரண்டு மடங்கு சேர்த்துபி எம் ஒய் திட்டத்தில் பங்களிப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், போன்றவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று பேசினார்.