BREAKING NEWS

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் அவர்கள் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களின் தலைமையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

“சமூக நீதி நாள் உறுதிமொழி”

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

CATEGORIES
TAGS