BREAKING NEWS

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் துவக்கி வைத்தார் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

 

சர்வதேச ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு திருப்பூர் மங்கலம் சாலையில் அமைந்துள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆயுர்வேத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

 

இந்த பேரணியை திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

 

 

குமரன் கல்லூரியில் துவங்கிய பேரணி ஆண்டிபாளையம், மாரியம்மன் கோவில் வீதி, பாரதி நகர் வழியாக சென்று மீண்டும் குமரன் கல்லூரி வந்தடைந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )