BREAKING NEWS

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

சாரல் மழை கடும் பனிமூட்டம் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு கொட்டி தீர்த்த கன மழையால், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இனறுகாலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது.

ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பலத்த மழையும் அதன் பின் கடுமையான பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றன. நேற்று இரவு பெய்த கன மழையால் ஏற்காடு படகு இல்லம் அருகில் மின்சார கம்பத்தின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் மின்சார கம்பம் உடைந்து நொறுங்கியது.

 

 

இதனால் நேற்று இரவு முழுவதும் ஏற்காட்டில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன உள்ளூர் வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கடும் குளிர் சாரல் மழை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

 

 

சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர் மேலும் மூன்று அடிக்கு மேல் வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

 

 

மேலும் கடும் பனிமூட்டம் சாரல் மழை காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது மேலும் கடும் பனிமூட்டம் சாரல் மழை காரணமாக மலைப் பாதையில் வாகனம் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்காடுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )