சாலியமங்கலத்தில் இலவச தியான யோகா பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடக்கிறது.
பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலத்தில் இந்திய கலாச்சார கழகம் மற்றும் ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்தும் 3நாள் இலவச தியானம், மூச்சுப்பயிற்சி, மற்றும் யோகா மஹோற்சவ விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவக்குமார் கலந்து குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் செந்தில்குமார், விவசாய சங்கம் ராஜகோபால், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசினார். முதல் நாள் நிகழ்ச்சியில் ஓய்வு நிலை யோக பயிற்சி, தியானம், குறித்து மண்டல ஒருங்கிணைப்பாளர் பொய்யாமொழி,மைய ஒருங்கிணைப்பாளர் மோகன்ராம் ஆகியோர் தியானம், மூச்சுப் பயிற்சியால் உண்டாகும் பயன்கள் குறித்து செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் காந்திஜீ நற்பணி மன்ற நிர்வாகி சம்மந்தமூர்த்தி, ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி செயலாளர் சாமிநாதன், உள்பட ஏராளமான பெண்கள். குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு தியானம் மூச்சு பயிற்சியில் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் நிறுவன ஊழியர்கள் செய்து இருந்தனர்.
பாபநாசம் செய்தியாளர்
எஸ் மனோகரன்