சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி அறிவூட்டும் வகையில், சென்னை காவல் துறையுடன் ஒருங்கிணைந்து, திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய, ‘நீங்க ரோடு ராஜாவா’ என்ற விழிப்புணர்வு குறும்படம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையிலும் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான நுண்ணறிவுகளை வழங்கும் மற்றொரு வீடியோவும் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேசியதாவது:
விழிப்புணர்வு குறும்படத்திற்கு நடிகர்கள் யோகிபாபு, சாந்தனு, அர்ச்சனா மட்டுமின்றி தொழில்நுட்ப கலைஞர்களும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்துள்ளனர். சென்னையில், 2021ம் ஆண்டில் விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை 573 ஆகவும், 2023ல் 204 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய போது, 279 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ல், இந்த உயிரிழப்புகள் 196 ஆக குறைந்துள்ளது. இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் 38 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், கடந்த ஆண்டு 60,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 100 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இணை கமிஷனர் மகேஷ் குமார், துணை கமிஷனர்கள் பாஸ்கரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.