BREAKING NEWS

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

சாலை மார்க்கமாக திருப்பதி சென்ற இபிஎஸ்க்கு திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு.

திருவள்ளூர் மாவட்டம்,

ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் இதனை செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொது குழுவை ரத்து செய்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த இபிஎஸ் தரப்பினர் வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து பொதுக்குழு மற்றும் செயற்குழு செல்லும் எனவும் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.

 

மேலும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இபிஎஸ் வருகை புரிந்து பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்தார்.

 

இதனை அடுத்து திருப்பதி ஏழுமலையான தரிசிக்க இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பதி சென்றார்.

அப்பொழுது திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ரமணா மற்றும் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் கமெண்ட்டோ பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மலர் தூவி பூங்கொத்து வழங்கி பொதுச் செயலாளர் வருக மக்கள் முதல்வரே வருக என உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

மேலும் திருவள்ளூர் மாவட்ட அதிமுகவில் மாவட்ட செயலாளர் ரமணா தலைமையில் ஒரு தரப்பினரும் திருத்தணி கோ ஹரி மற்றும் கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் ஒரு அணியாகவும்,

செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இரு தரப்பிற்கும் சமாதானம் செய்து ஒற்றுமையாக இருக்க வழி நடத்துவதற்கு மாறாக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இரு தரப்பினருக்கும் தனித்தனி வரவேற்பு இடங்களை அளித்தது அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )