BREAKING NEWS

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!

சாலை விபத்தில் இறந்த இளைஞரின் உடல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கல்!

கர்நாடக மாநிலம், பெங்களூரு வடக்கு, நண்பர்கள் காலனி, ராஜா பேக்கரி அருகில், முதல் குறுக்கு தெரு, எண் 146/ 2 பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் ஐடிஐ படித்து விட்டு சிஎம்சியில் மெஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா டோல்கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கடந்த 22 ஆம் தேதி 12.30 மணியளவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

அப்போது அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது. இதையடுத்து 23ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் 9:27 மணியளவில் பரிதாபமாக சதீஷ் இறந்தார்.

இந்நிலையில் இறந்த சதீஷின் உடல் பாகங்களான கல்லீரல், சிறுநீரகங்கள், இரு கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் (ராணிப்பேட்டை வளாகம்) வேலூர் சிஎம்சி மருத்துவமனைகளுக்கு தானமாக அவரது பெற்றோர் வழங்கினர்.

இறந்த சதீஷின் தந்தை பாலசுப்ரமணியன், தாய் மகேஸ்வரி .இந்த சதீஷூக்கு சரண்யா என்ற 27 வயது மதிக்கத்தக்க அக்காவும் ,21 வயது மதிக்கத்தக்க சந்தியா என்ற தங்கையும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் திருமணமாகாத நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல் தானமாக பெறப்பட்டு தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரைஜாஸ்பர் விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS