சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம்.
நடாவி கிணறு எனும் பூமி பட்டத்தின் கீழ் 20 அடி ஆழத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து உற்சவம் கண்டருள்வது வழக்கம்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடவாவி கிணறு உற்சவம் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமி நடவாவி கிணறு உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து கிளம்பி ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி,கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டு அருளியபடி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலுக்கு எழுந்தருளுவார்.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று சித்ரா பௌர்ணமி தினம் என்பதால் காஞ்சி வரதர் எழுந்துள்ள அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர் கிராம பொதுமக்கள்.
சஞ்சீவிராயர் கோயிலில் இருந்து நடாவி கிணற்றுக்கு செல்லும் பாதைகளை சுத்தம் செய்தல் , நடாவி கிணற்றிலிருந்து நீரை இறைக்கும் பணி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு அன்று காலை எட்டு மணி முதல் கிணற்றின் உள்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியை துவக்க உள்ளதாகவும் இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெறவுள்ளதாகவும்,
கிராம வீதிகளில் தசாவதாரம், ஸ்ரீரங்கநாதர் மற்றும் காஞ்சி அத்தி வரதர் திருக்கோலங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் 16வது ஆண்டாக ஸ்ரீ பெருந்தேவி தாயார் தேவ வரதர் அன்னதான குழுவினர் சார்பில் தொடர் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறுகிறதால் பொதுமக்கள் அனைவரும் வருகை புரிந்து இறைவனின் திருவருள் பெற விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.