சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள முல்லைப் பெரியாறு ஆற்றின் அருகே உள்ள நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடியில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று அப்பிபட்டி, ஓடைப்பட்டி, மற்றும் தென்பழநி பகுதிகளில் உள்ள வறண்ட நிலங்களின் பாசன வசதிக்கு கொண்டு சென்று பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணி துறையினர் பெரியாற்றின் அருகே இருந்து நிலத்தின் கீழே கொண்டு சென்ற பைப் லைன்களை அப்புறப்படுத்தி தண்ணீர் கொண்டு செல்ல தடை விதித்தனர்.
மீண்டும் பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் தண்ணீர் கொண்டு செல்ல தொடர்ந்து தடை விதித்து வருவதால்..
இன்று சின்னமனூரில் காந்தி சிலையிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலத்தை தொடங்கினார்கள்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லாததால் மார்க்கையன் கோட்டை பிரிவு அருகே தடுப்பு கம்பி வேலி அமைத்து தடை விதித்தனார்.
ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய விவசாயிகள் போலீசார் அனுமதி தர மறுத்ததால் நெடுஞ்சாலையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சின்னமனூர் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.