சிலிண்டர் கேஸ் லிகானதால் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்துணவு அமைப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சேர்ந்த நாராயணன் மனைவி விஷ்ணுபாலா, 32 அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு சமையல் முடித்துக் கொண்டு ரெகுலேட்டரை ஆப் செய்யாமல் மின்விளக்கு சுவிட்சை மட்டும் ஆப் செய்துவிட்டு தூங்கச் சென்றனர் பின்னர் காலை விஷ்ணு பாலா, சமையலறைக்குச் சென்று மின் விளக்கை ஆன் செய்த போது திடீரென தீ பற்றியது பின்னர் விஷ்ணு பாலா கூச்சலிட்டதில், கணவர் நாராயணன் மற்றும் உறவினர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.
தீ பறவியதால் உடைந்து விஷ்ணு பாலா உடல் முழுவதும் தீ பரவியது. குறித்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் டீக்காராமன், தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சரவண மூர்த்தி, எஸ்பி தனிப்படை எஸ்ஐ காந்தி, ஆகியோர் கலவை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆம்புலன்ஸ் மூலம் விஷ்ணு பாலாவை மீட்டு கலவை அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிலிண்டரில் இருந்து காசிக்கு வரும் ஓஸ் பழுப்பை முனையில் எலி கடித்துள்ளதால் கேஸ் வெளியாகி தீப்பிடித்துள்ளது என தெரியவந்தது. மேலும் கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.