BREAKING NEWS

சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சால் உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியரின் உருவப்படத்திற்கு வேலூரில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய டாஸ்மார்க் ஊழியர்கள்.

வேலூர் மாவட்டம்,

சிவகங்கை மாவட்டம் டாஸ்மாக் கடை எண்-7721 -ல் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் என்பவர் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை கண்டிக்கும் வகையிலும், உயிரிழந்த டாஸ்மார்க் ஊழியர் அர்ஜுனனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வளாகத்தில் வேலூர் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்க கூட்டுக் குழுவின் சார்பில் அர்ஜினனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS