சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு சென்று சோதனை இட்டபோது கமலேஷ் குமார், இமானுவேல் இளவரசன், சுபாஷ் சந்திர போஸ், கனகராஜ், சதீஷ்குமார், சிவக்குமார் ஆகியோர் வீடுகளில் சமைத்த நிலையில் மான் கறி கைப்பற்றப்பட்டது.
மேலும் மான் கறியை சமைத்து சாப்பிட்ட குற்றத்திற்காக அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் – திருநெல்வேலி உத்தரவுப்படி நபருக்கு தலா 50,000 ரூபாய் விதம் 6 நபர்களுக்கு ரூபாய் 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சிவகிரி வனப்பகுதியில் மான் மேல காட்டுப்பன்றி வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளதும் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை வனத்துறையினர் வேட்டையாடி அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.