BREAKING NEWS

சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.

சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.

வேலூர் மாவட்ட சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாக சங்க உறுப்பினர்கள் பணியாளர்கள் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஆய்வறிக்கையில்,

 

தலைவர்ஜெயக்குமார், இயக்குனர்கள் கோவிந்தராஜ், வெங்கட்ராமையா, ஆகியோர்சொந்தமாக கடன் பெற்று தவணையை திருப்பி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டு தெரியவந்தது.

 

தாங்கள் பெற்ற கடனை 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்று பலமுறை கடிதம் மூலம் வலியுறுத்தியும் செலுத்தாத காரணத்தினால்.தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்ட விதி 1983 ஆண்டு விதியின்படிநிர்வாக குழு தகுதியற்றவை ஆகிவிடும்.

 

அவர்களை துணைப்பதிவாளர் தகுதி நீக்கம் செய்யலாம் அதன் அடிப்படையில் தலைவர் ஜெயக்குமார் இயக்குநர்கள், கோவிந்தராஜ், வெங்கட்ராமையா ஆகிய 3 – பேர்பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்று கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவர்கள் ஏற்கனவே கூட்டுறவு பதிவாளர் ஆய்வு செய்த, ஆடிட்டர் ஆய்வு அறிக்கையில் சங்கத்தில் 10,52,036 – ரூபாய் முறைகேடு நடந்துள்ளது., எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,. குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )