சீனாவுடனான கல்வான் போரில் உயிர் இழந்தவர்களுக்கு வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் அஞ்சலி மௌன ஊர்வலம்.

கடந்த 21 ஆம் ஆண்டு சீனாவுடனான நடந்த போரில் எதிரி நாடான சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இன்று வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் சங்கத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தி மவுன ஊர்வலம் நடத்தினர்..
முன்னதாக கர்னல் சஞ்சய் ஷர்மா, கர்னல் கல்யாண சுந்தரம், கர்னல் கங்காதரன், கர்னல் கே.என். நாயுடு ஆகியோர் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் தொடர்ச்சியாக
வேலூர் மாவட்ட முன்னாள் இராணுவ வீரர்கள் நலசங்கத் தலைவர் சிவக்குமார்,செயலாளர் ஜம்புலிங்கம், மற்றும் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் என்சிசி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த மௌன ஊர்வலம் சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓடை பிள்ளையார் கோவில் வரை சென்று மீண்டும் சித்தூர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
வேலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் போற்றப்பட வேண்டிய இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகங்கள் பொதுமக்கள் அறிய வேண்டிய வகையில் இந்த மலர் அஞ்சலி மற்றும் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது என்று கூறினார்.
வேலூர் மாவட்ட முன்னாள் மற்றும் இந்நாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
