BREAKING NEWS

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டம்

மிக மோசமான நிலையில் உள்ள சாலையை சீரமைக்காத திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொன்மலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருச்சி பொன்மலை கணேசபுரத்தில் திருச்சி மாவட்டத்திலேயே அதிக துப்புரவு தொழிலாளர்கள் வசிக்கும் இடமாக உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டது.

 

 

அதன் பின்னர் சாலையை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யவில்லை மேலும் அங்கு உள்ள தெருக்களில் சாக்கடை தண்ணீரும் தேங்கியுள்ளது. 

 

மழைக்காலங்களில் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்ததால் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

பின்னர் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக சாலையை சரி செய்து தருகிறோம் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 

 

மேலும் இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கூறியது போல் சாலைகளை சரி செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

 

 

இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் மோகன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சியில் அனைத்து பகுதிகளையும் நாங்கள் தூய்மை செய்கிறோம். ஆனால் எங்களுக்கே இந்த நிலைமையா என்று அப்பகுதி மக்கள் புலம்பி சென்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )