BREAKING NEWS

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2, ஆம் தேதி இரவு உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டது போல் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து, நாகை எஸ்.பி ஜவகர், மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடைய அறிவியல் பிரேதப் பரிசோதனையில் கனிவண்ணன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம்! என்று தடைய ஆய்வில் தெரிய வந்ததை அடுத்து, போலீசார்.
சமையல் மாஸ்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு என்ன முன் விரோதம் ஏற்பட்டிருக்கும், அவருடன் நெருங்கி பழகியவர்கள் யார்? யார்? என்ற முக்கிய கோணத்தில் கொலையான கனிவண்ணனின் செல்போனை ஆய்வுக்கு உட்படுத்தி போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

இதில் சீர்காழி, தென்பாதி ஆர். வி. எஸ், நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த
(சி. ஆர் பி. எப் )மத்திய துணை ராணுவ படையைச் சேர்ந்த தேவேந்திரன் (53),
கனிவண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் அவரை வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நடந்த சம்பவம் குறித்து தேவேந்திரன், விஏஓ முன்னிலையில், போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலம், சீர்காழி அடுத்தமன்னிப்பள்ளம், உடையூர் பள்ளிக்கூடம் தெரு சாமிதுரை மகன் தேவேந்திரன், 1994 இல் சி.ஆர் பி.எப். வேலையில் சேர்ந்து காஷ்மீர், அசாம், சத்தீஸ்கர், போன்ற பல மாநிலங்களில் பணியாற்றி விட்டு, தற்பொழுது 198 வது பட்டாலியன் விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தபயலு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமாகி, மனைவி, மகள், மகனுடன், சொந்த ஊரில் வசித்து வந்து, பின்னர் 2018 முதல் பிள்ளைகளின் படிப்பிற்காக சீர்காழி தென்பாதி ஆர். வி. எஸ் நகரில் வாடகை வீட்டில் இருந்து வந்தோம்.

 

அப்பொழுது தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் கனிவண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில், தனது குடும்பத்தினரை உறவினர்களிடம் தவறாக பேசியதால்
கனிவண்ணன் மீது கடும் கோபம் வந்தது.

 

கடந்த 2 தேதி இரவு கனிவண்ணன் உப்பனாற்று வலது கரையில் கனிவண்ணன் பைக்கில் தனியாக வந்து மண் தரையில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை அறிந்தேன். அப்பொழுது அங்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த 9 எம் எம் பிஸ்டல் துப்பாக்கியால் கனிவண்ணன் நெற்றி பொட்டில் சுட்டேன். கீழே விழுந்தவுடன் அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு சென்று விட்டேன். பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பொழுது சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் என்னை கைது செய்தனர். இவ்வாறு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் தேவேந்திரன், தென்பாதி வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு ஏர்கன், ஒரு டம்மி பிஸ்டல் ,ஒரு நாட்டு கை துப்பாக்கி, ஒரு 9 எம் எம் பிஸ்டல் 2, மேகசின்,7(7.62) லைவ் புல்லட், 19 லைவ் புல்லட், 3, காலி கேஸ்ட், ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் தேவேந்திரன் அனுமதியின்றி வைத்திருந்த துப்பாக்கிகள், மற்றும் தோட்டாக்களை எங்கிருந்து வாங்கினார் எப்படி கொண்டு வந்தார், என்பது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS