BREAKING NEWS

சுரங்க துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சுரங்க துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் செல்வசேகர் வீட்டில் இன்று அதிகாலை 5.30 மணியிலிருந்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்

இவர் விருதுநகர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் ராமச்சந்திரன் என்பவர் செல்வசேகர் மீது 2015 இல் புகார் அளித்திருந்தார்

அதன் மீதான விசாரணை செய்து 2023 இல் குற்ற நடவடிக்கை உறுதி செய்து பல்வேறு அலுவல் ஆய்வுக்குப் பின்பு இன்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சோதனையில் ஈடுபட்டனர்

இவர் மீதான குற்றச்சாட்டுகள் திண்டுக்கல் மாவட்டத்திலும் சமீபகாலமாக ஆங்காங்கே எழுந்து வருகிறது

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன

அதில் ஒரு சில குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது மீதம் உள்ள 80 சதவீதத்திற்கும் மேலான குவாரிகளுக்கு அனுமதி இல்லாமல் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் அதனால் தொழில் செய்ய முடியவில்லை என்று தொழிலை கைவிடும் நிலை உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்


இவ்வாறு பல்வேறு வகைகளில் உதவி இயக்குனர் தொந்தரவு கொடுப்பதால் கல் குவாரி நடத்துபவர்கள் நடத்த முடியாமல் தங்கள் தொழிலை கைவிடும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகின்றனர்.

 

இவ்வாறு அரசுக்கு நேர்மையாக வரக்கூடிய வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்படும் உதவி இயக்குனர் செல்வசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

CATEGORIES
TAGS