BREAKING NEWS

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் சுற்றுலா பயணிகள் புலம்பல்..

தேனி மாவட்டத்தில் சுற்றுலா தலமான சுருளி அருவி உத்தமபாளையத்தில் பதினேட்டு கிலோமீட்டர் தொலைவிலும் கம்பத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இங்கு அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.nike air max 270 womens custom baseball jerseys blonde wig nfl jerseys for sale nfl superbowl football jerseys best sex toy store wigs sale custom football uniforms nfl jerseys nfl fan shop customize jersey baseball custom mlb jerseys nike air max 90 womens nike air max 270 womens 

 

மேலும் எழில் கொஞ்சிடும் இயற்கை நிறைந்த பகுதியாகவும் சுமார் நாற்பது அடி உயரத்தில் இருந்து மூலிகை கலந்த தண்ணீராக உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர் மேலும் இந்த ஸ்தலம் புண்ணிய ஸ்தலமாகவும் இந்த ஸ்தலத்தில் சுருளி ஆண்டவர் பக்தர் களுக்கு அருள்பாலிப்பது இன்னும் சிறப்பு.

இப்படிப்பட்ட சூழலில் சுருளியின் நுழைவாயிலில் சுருளிபட்டி ஊராட்சி நிர்வாகத்தினால் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதற்கு அப்பால் அருவிக்கு செல்லும் நுழைவாயிலின் உள்புரம வனத்துறையால் நபர் ஒருவருக்கு முப்பது ரூபாய் நுழைவு கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

 

தினமும் நூற்றுகணக்கானோர் வந்து செல்லுகின்றனர் விடுமுறை தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் சூழழில் இங்கு வரும் பொது மக்களுக்கு கீழ் தளத்திலிருந்து அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் சற்றுலா வாகன வசதிகள் செய்யப்படாத நிலையிலும் சாலை வசதிகள் இல்லாமலும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளாக குடிநீர், கழிப்பிடம் உடை மாற்றும் அறை போன்றவைகள் இருந்தும் சரிவர பராமரிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் புலம்பி வருகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் ஈட்டும் வனத்துறை சுருளி அருவியில் ஏன் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்று சமூக ஆர்வலர்களும் புலம்பி வருகின்றனர் மேலும் மாவட்ட நிர்வாகம் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத் தொகையினை தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் பயன் பெரும் வகையில் கட்டண குறைப்பு செய்திடுமாறும் அடிப்படை வசதிகள் மேற்கெள்ளுமாறு பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்களும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையை முன் வைக்கின்றனர்.

CATEGORIES
TAGS