சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
இங்கு தேனி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கேரளா ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையினால் தற்போது சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
CATEGORIES தேனி
TAGS கம்பம்கம்பம் சுருளி அருவிசுருளி அருவி குளிக்க தடைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்தேனி வனத்துறைமுக்கிய செய்திகள்