சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

தஞ்சை ஆற்றுப் பாலம் தடுப்புச்சுவர் ஒளிரூட்டிகளை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தஞ்சை ஆற்றுப் பாலம். மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகன ஒட்டிகளுக்கு எச்சரிக்கையாக கருப்பு வெள்ளை வர்ணத்தில் பெயிண்ட்கள் ஒளிருட்டிகளாக அடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒளிரூட்டிகள் மீது அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களை சார்ந்தவர்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதன காரணமாக வாகன பாலம் தடுப்பு சுவர் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

இதனை அடுத்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஆற்றுப் பாலம், தடுப்பு கவரில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை தானே பிரித்தார்.
பின்னர் உடன் வந்த அதிகாரிகளிடம் சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகளிடம் அபராதம் வசூலிக்கும்படி உத்தரவிட்டார்.
