செங்கம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்கள் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதூர் செங்கம் பகுதியைச் சேர்ந்த மாரி மகன் முத்துகுமரன் (வயது 19) சேகர் மகன் கருணாநிதி (வயது 23) மணி மகன் சக்திமுருகன் (வயது 25) ஆகியோ தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
புதூர் மாரியம்மன் கோயில் அருகே மது அருந்து கொண்டிருந்த மூவரையும் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான புதுப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று மூவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் கைபேசியை பறிமுதல் செய்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
CATEGORIES திருவண்ணாமலை