செங்கல்பட்டில் கிராம உதவியாளர் களுக்கான தகுதித்தேர்வு.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு.
தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பதியாக செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைகல்லூரியில் செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் கிராம உதவியாளர் தேர்வு எழுதினர்.
மேலும் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட அதிகாதிகள் பணியில் ஈடுப்பட்டனர். தேர்வு எழுத வருபவர்கள் கைபேசி, பேக் (பை) உள்ளிட்ட உடமைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம் உள்ளிட்ட தாலுக்காக்களில்,..
57 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளிட்டது. இதைத்தொடர்ந்து, 7,866 நபர்கள், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப் பித்திருந்தனர். இவர்களுக்கான தகுதி எழுத்து தேர்வு, இன்று நடைபெற்றது.