BREAKING NEWS

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் இயங்கி வரும் எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக வளாகத்தில் 12 ஆயிரத்து 900 பேர் பங்கேற்ற மாபெரும் பொங்கல் விழா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் நடத்திய பொங்கல் திருவிழாவில் மாணவ, மாணவியர் உட்பட சுமார் 12,900 பேர் பங்கேற்றனர்.

 

உலக அளவில் அதிகமானவர்கள் பங்கேற்ற இந்த பொங்கல் திருவிழா உலக சாதனையாக கருதப்பட்டு உலக ஐக்கிய பதிவு புத்தக அமைப்பு(World Union Book of Records) சான்றிதழ் வழங்கியது.

அரசு அனுமதி பெற்று பொங்கல் திருவிழாவில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று எஸ்ஆர்எம் கல்வி குழுமம் வேந்தரும் , எம்.பி யுமான பாரிவேந்தர் தெரிவித்தார்.

 

உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின் திருவிழாக்களில் முக்கியமானது பொங்கல் திருவிழாவாகும். பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வீரத்தை பரை சாற்றும் இந்த விழாவை தமிழர்கள் தொன்று தொட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

 

அதன்படி எஸ்ஆர்எம் கல்வி குழுமம் சார்பில் சென்னை அடுத்த காட்டாங்குளத்துரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் இன்று பொங்கல் திருவிழா வண்ணமயமாக நடைபெற்றது. எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம், மாணவர் நலன் இயக்ககம், விளையாட்டு துறை ஆகியவை இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தன.

 

இவ்விழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர், ஆசிரியர் பெருமக்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என சுமார் 12,900 பேர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்றவர்களில் பலர் தமிழர்களுக்கே உரிய பட்டு, கைத்தறி ஆடைகளை உடுத்தி உற்சாகமாக, வண்ணமயமாக பங்கேற்றனர்.

பொங்கல் விழாவை யொட்டி எஸ்ஆர்எம் நிறுவன நுழைவு பகுதியிலிருந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, நாதஸ்வரம், பறை இசை முழங்க , கரகாட்டம், மயிலாட்டம், குயிலாட்டம்,கோலட்டம், சிலம்பம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்களுடன் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் தொடங்கியது.

 

தொடர்ந்து வளாகத்தில் எஸ்ஆர்எம் குழுமத்தின் 10 துறைகள் சார்பாக 10 பானைகள் வைக்கப்பட்டு மாணவ மாணவியர் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக ஒலி எழுப்பினர்.

தொடர்ந்து விழாவில் மாணவ மாணவியரின் பரத கலை நாட்டியம், யோகவுடன் இணைந்த நாட்டிய நடனம், திரை இசை பாடல்களுக்கு நடனம், பஞ்சாபின் பங்கார நடனம் ஆகியவற்றுடன் தமிழர்களின் வீர விளையாட்டுகளான உரிமை அடித்தல், சிலம்பம், கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றன. இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

 

 

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தரும், பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமை வகித்து பொங்கல் விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில் :

தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் முதன்மையானது பொங்கல் விழாவாகும், பொங்கல் விழாவில் பொங்கலிடுதல் மற்றுமின்றி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம், வீரம் ஆகியவற்றை பரைசாற்றும் உறியடித்தால், கயிறு இழுத்தல், சிலம்பம், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுக்களும் உண்டு.

 

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களில் 60 நாடுகளில் இருந்து வந்துள்ள மாணவர்கள் பயிலுகின்றனர். அதோடு நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயிலுகின்றனர். எனவே பொங்கல் விழாவை எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்று கருதி அதன் மூலம் இவ்வளவு பெரிய அளவில் நடத்தப்படுகிறது.

 

இதில் மாணவ, மாணவியர் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என சுமார் 12,900பேர் பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளனர்.

எஸ்ஆர்எம் பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு போட்டியும் நடத்த திட்டமிட்டுள்ளோம் அதற்கான அரசின் உரிய அனுமதி பெற்று நடத்தப்படும்.

 

இந்த பொங்கல் விழாவில் 12,900 பேர் பங்கேற்றது உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனைக்காக உலக ஐக்கிய பதிவு புத்தக அமைப்பு(World Union Book of Records) சான்றிதழ் வழங்கி உள்ளது. அந்த அமைப்பின் சாதனை பதிவு அலுவலர் ஷரீப்பா ஹனிபா விழாவில் உலக சாதனை சான்றிதழை எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் வேந்தர் பாரிவேந்தரிடம் நேரிடையாக வழங்கினார்.

 

பொங்கல் விழாவில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன துணை வேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் சு. பொன்னுசாமி, இணை துணைவேந்தர் (மருத்துவம் மற்றும் ஆரோக்கிய அறிவியல் )லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ. ரவிக்குமார்,

 

தமிழ்ப்பேராயம் தலைவர் முனைவர் கரு.நாகராசன் திருமதி பத்மப்ரியா ரவி பச்சமுத்து, திருமதி மணிமங்கைசத்தியநாராயணன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS