BREAKING NEWS

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம்  மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.

 செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நள்ளிரவு முதல் அதிதீவிர காற்றும் வீசிவந்தது.

அதன் காரணமாக குருவண்மேடு, ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.

 

 

செங்கல்பட்டு அடுத்த பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த தரைபாலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

 

இந்நிலையில் ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளம் சூழ்ந்ததால் ரெட்டி
பாளையத்திலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

 

ஆண்டு தோறும் மழையின்போது இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுவது வழக்கம். அந்த சமயத்தில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்து தற்காலிக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இன்று வரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.

 

தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதையும் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் சாலைகள் மூழ்கியநிலையில் வேலைக்கு செல்பவர்கள் 5 முதல் 10 கி.மீ. தூரம் வரை சுற்றிதான் வேலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது புதிய மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )