செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செய்தியாளர் செங்கைப் ஷங்கர்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர் ஆலயத்தில்
சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்திலேயே திருப்பரங்குன்றம், பழனி, திருவண்ணாமலை, பருவதமலை
உள்ளிட்ட நான்கு ஸ்தலங்களில் கொப்பரை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஐந்தாவது ஸ்தலமாக விளங்கக்கூடிய இந்த திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் இந்த வருடம் முதல் 2700 அடி உயரமுள்ள மலை உச்சியில் 111லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் மகா தீபமானது ஏற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டை போல இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளன்று இந்த ஆலயத்திலிலும் மஹாதீபம் ஏற்றப்படும் என ஆலய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதியில் இருந்து மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீபம் ஏற்றியவுடன் வழிபட்டனர் சென்றனர்.