BREAKING NEWS

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில்  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

 

சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி எஸ்.எஸ்.பாலாஜி பனையூர்பாபு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துறையாடி பொது
மக்களிடமிருந்து.

 

மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது: 

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு. அந்த மனுக்களை துறை வாரியாக பிரித்து அனுப்பி அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இன்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுக்கள் பெறப்படுகின்றது.

 

 

இந்த மனுக்களை துறை வாரியாக பிரித்து அனுப்ப தனி சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு. வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்து மனுக்கள் மீது வாரந்தோறும் ஆய்வு மேற்கொண்டு. தீர்வு காணக்கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

மேலும் நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்படும் எனவும் முதற்கட்டமாக நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்றையதினம் 712 மனுக்களை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டுள்ளது.

 

இந்த மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரி செய்ய வேண்டும். மின்கம்பங்களை மாற்றப்பட வேண்டும்.

 

 

சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது அதனை சரி செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேற்றயதினம் பெறப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜீவனா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார்., தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ காமராஜ், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் எல்.இதயவர்மன். ஆர்.டி.அரசு, சங்கீதா பாரதி ராஜன், உதயா கருணாகரன், சுபலட்சுமி பாபு. கே.கண்ணன். நகர்மன்ற தலைவர்கள் ஷண்முகம், எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, தேன்மொழி நரேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )