செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், வேதாச்சலம்நகர், இராட்டிணங்கிணறு, அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம், அனுமந்தபுத்தேரி, வல்லம், ஆலப்பாக்கம், திம்மாவரம், ஆத்தூர், பாலூர், பரனூர், புலிப்பாக்கம், மகேந்திராசிட்டி, சிங்கபெருமாள் கோயில் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
தினமும் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி பனி மூட்டத்துடன் காணப்படும் நிலையில்
கடந்த ஒரு வார காலமாக வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில் மக்கள் குளிர்ந்த காற்றை சுவாசித்து ஊட்டி, கொடைக்கானலை போல் உணர்கின்றனர்.
இதற்கிடையில் தற்போது மிதமான மழை பெய்து வருவதால் மேலும் குளிர் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.