செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.
இதில், தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அம்பரிஷ் தலைமையில், தோல் மருத்துவர் நிபுணர் உசேன், மருத்துவர் கார்த்தி அறுவடை நம்பி ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இந்த அறுவை சிகிச்சை முகாமில் குடலிறக்கம், மூலம், பௌத்திரம், பித்தப்பை கல், தோல்கட்டி மற்றும் புற்றுநோய் கட்டி போன்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
முகாமில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
