BREAKING NEWS

செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணியை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.

செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணியை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு.

அரியலூர் மாவட்டம் செந்துறை கலிச்சாக்குளம் ஏரி தூர் வாரும் பணி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

மேலும் கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளது. தற்பொழுது கலிச்சாக்குளம் ஏரி தூர்வாரி கரைய பலப்படுத்துவதினால் இப்பணி முடிவுற்றதும் சுற்றியுள்ள விளைநிலங்கள் இருபோக சாகுபடிக்கு பாசன நீர்பெறும் வகையில் ஏரி அமையும் எனவே விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாக இந்த திட்டம் உள்ளது என கூறுகின்றனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் தி.மு.க ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்வராஜ் எழில்மாறன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன், பிரபாகரன் பொறியாளர்கள் வைதேகி, ரேவதி, மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர்கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS