BREAKING NEWS

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி

செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தியவர் கைது அரியலூர் மாவட்ட சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. போலீசார் அதிரடி

அரியலூர் மாவட்டம் தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 19.07.23ந்தேதி திருச்சி மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சுஜாதா அவர்களின் அறிவுரையின் பேரிலும் மயிலாடுதுறை சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் M. பாலசுப்பிரமணியன் தலைமையில்..

 

மயிலாடுதுறை அலகு, அரியலூர் அலகு பொறுப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா பாரதிதாசன் மற்றும் போலீஸார்களால் அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான, அரிசி, கோதுமை, து.பருப்பு, சர்கரை முதலிய பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல்படுவதை தடுக்க 19/7/2023 அன்று காலை 7 மணிக்கு செந்துறை தாலுக்கா கொடுக்கூர் பஸ் ஸ்டாப் அருகே வாகன தணிக்கை‌ செய்தபோது..

 

அந்த வழியாக வந்த Eicher நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்து வாகன ஓட்டுனரை விசாரிக்க அவர் முன்னுக்கு பின் முரணாக கூறி பின் தனது பெயர் சிவக்குமார் S/o முத்துசாமி பெரியபாளையம் பட்டி (Post),பரமத்தி வேலூர் தாலுகா, நாமக்கல் மாவட்டம் என்று கூறி மேலும் விசாரணை செய்ய தன் ஓட்டி வந்த வாகனத்தில்
சுமார் ஒரு டன் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்திச் சென்றவரை கைது செய்யப்பட்டது மேலும் இக்கடத்தலில் தொடர்புடைய இரண்டு தலைமறைவு எதிரிகளை அரியலூர் சிவில் சப்ளை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர் .

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

CATEGORIES
TAGS