BREAKING NEWS

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 

சென்னையில் போதைப் பாக்கு விற்றதற்காக ஒரு வாரத்தில் 153 போ் கைது செய்யப்பட்டனா். 

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘புகையிலைப் பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.

 

அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாா் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

இந்த நிலையில், கடந்த அக்.29 முதல் நவ.5-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தி வருதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 153 போ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடம் இருந்து 699 கிலோ போதைப் பாக்குகள், 4 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய 3 கைப்பேசிகள், ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )