BREAKING NEWS

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.!!

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.!!

சென்னையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.எனவே, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

 

 

குறிப்பாக, வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 

பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

 

வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

 

வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக் கடைகள் வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )