சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கிற்கு பிறகு அனைத்தின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் முதல் தீப்பெட்டி வரை அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அத்துடன் தொடர் மழை காரணமாக விளைபொருட்களும் விலையேறி சாமானியர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றன.
அதன்படி கடந்த சில நாட்களாக தக்காளி, பீன்ஸ், அவரை விலையும் அதிகரித்து வருகிறது. அதில் தக்காளி விலை ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்தது. இதனால் தக்காளி வரத்து தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ரூ.80 முதல் ரூ.85 வரை மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனை ஆனது.
சாதாரண கடைகளில் இதன் விலை மேலும் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, தக்காளி விலை மேலும் ஒரு இடியாக அமைந்தது. நேற்றும் தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகரித்து இருந்தது. அதாவது மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளில் ரூ.79க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறையத் தொடங்கிய அதே நேரத்தில் தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகவலால் இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.