BREAKING NEWS

செம்பட்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.

செம்பட்டியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பழைய செம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைகள் மற்றும் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க செம்பட்டி கிளை செயலாளர் ஆசிரியர் ராமு வரவேற்று பேசினார்.

 

தமிழ்நாடு அறிவியல் இயக்க செ.பாறைப் பட்டி கிளை செயலாளர் கவிஞர்.மா. கண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராஜு , துளிமை தன்னார்வ இயக்க பொறுப்பாளர் விஜயராகவன்,.கோ. புளியகுளம் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரூபன் நெல்சன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் முனைவர் பேராசிரியர். எஸ். தினகரன் சிறப்புரை ஆற்றினார். செம்பட்டி, பழைய செம்பட்டி, செ.பாறைப்பட்டி, திம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கிளை துவக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பு.பரமேஸ்வரி அறிவில் இயக்க செயல்பாடுகள், மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் செயல் பாடுகள் குறித்து விரிவாகப் பேசினார்.

 

 

மாவட்ட அளவில் குறும்படம் தயாரிக்கும் போட்டில் சிறப்பிடம் பெற்ற ஆத்தூர் ஒன்றிய இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் சத்யா, பிரியங்கா பரிமளா தேவி ஆகியோருக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ஆத்தூர், கதிர் நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர்,அ. குரும்பபட்டி, சேடப்பட்டி ,பழைய செம்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கான துளிர் இல்லங்கள் துவக்கி வைக்கப்பட்டு இதற்கான இணைப்பு கட்டணம் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

 

ஒவ்வொரு துளிர் இல்ல வழிகாட்டு ஆசிரியர்களுக்கும் புத்தகங்கள், மாணவர் நாளிதழ், குறிப்பேடு, மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவில் இயக்க செம்பட்டி கிளை தலைவர் ஆசிரியர் ஆ.கருப்பையா செய்திருந்தார்.

 

 

இல்லம் தேடி கல்வி திட்ட ஆத்தூர் ஒன்றிய பொறுப்பாசிரியர் ராஜமாணிக்கம், பள்ளி வானவில் மன்ற பொறுப்பாளர்கள், ஆத்தூர் ஆர்.சி. திரு இருதய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரிய சாந்தி, அ.குரும்பபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை மா.தங்காகண்மணி, ஆசிரியர் ரமேஷ், கிளை பொறுப்பாளர்கள் பால்பாண்டி, ராமன், முருகன், முத்துமாரி இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் மாணவ மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

ஏப்ரல்-4 சர்வதேச கேரட் தினம் என்பதால் கலந்து கொண்டவர்களுக்கு கேரட்டுடன் சுண்டலும் வழங்கப்பட்டன. பழைய செம்பட்டி கிளை தலைவர் மா. பால்பாண்டி நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS