BREAKING NEWS

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில், காட்டுச்சேரி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடு புணரமைக்கும் 5 பணிகள் ரூ.2.50 இலட்சம் செலவில் வீடு மறு கட்டுமான 95 பணிகள் ரூ.399 இலட்சம் செலவிலும், இதர 9 பணிகள் ரூ.52.30 இலட்சம் செலவில், கூடுதல் 109 பணிகள் ரூ.4.53 கோடி செலவில், வீடு கட்டும் பணிகளையும்,

 

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஊரக பகுதியில் உள்ள நீர்நிலை நிலைகளை புதுப்பித்தல் கூறுகளின் கீழ் ரூ.6.13 மதிப்பீட்டில் செம்பனார்கோயில் ஒன்றியம் காழியப்பநல்லூர் ஊராட்சி அய்யனார்கோயில் குளம் தூர்வாருதல், வரத்து வாய்க்கால் படித்துறை மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல் பணியினையும்,

 

திருக்கடையூர் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2022 – 2023 ஆம் ஆண்டு குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டும் பணி, 2021 – 2022 ஆம் ஆண்டு பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டும் பணியினை என ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய
அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கத்திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகிய வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 

ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

காட்டுச்சேரி சமத்துவபுரம், திருக்கடையூரில் வகுப்பறை கட்டும் பணி ஆகிய பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உன்னத திட்டமான காலை உணவு திட்டம் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு உருவாக்க புதிய வகுப்பறை கட்டிடம், சமையல் கூட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுப்படி, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆயிரம் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.823 கோடி மதிப்பீட்டில் ஜனவரி மாதம் முதல் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் புதிய பள்ளிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

இப்பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற ஜூன் மாதம் 5 முறை முதலமைச்சராக பொற்கால ஆட்சி நடத்திய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் மாணவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன்.

 

நேற்று தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் இன்று மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இன்னும் 15 – நாட்களில் புதிய வகுப்பறை கட்டும் பணி நிறைவடையும். இதுவரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எந்த அரசும் செய்யாத காரியத்தை நமது முதல்வர் பழுதடைந்த பள்ளிகளை நீக்கி புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் தலைசிறந்த திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

 

கிராமப்புறம், நகர்ப்புறம், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கும் திட்டம் 10,000 கி.மீ.தூரம் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும். இப்பணிகள் தொடங்கி நான்கு மாதத்தில் நிறைவடையும்.

 

அனைத்து கிராமப் புறங்களிலும் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 2 இலட்சத்தி 23 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளனர். பட்டா வழங்காமல் உள்ளவர்களுக்கு மிக விரைவில் பட்டா வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி பொறுப்பேற்ற 3 மாதத்தில் 500 வீடுகள் விரைவாக கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம் தலைசிறந்த திட்டமாகும்.

 

காட்டுச்சேரியில் 95 வீடுகள் மிக சிறப்பாக கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. ஊரக பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு வசதி, நீர்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்தேக்க தொட்டி தற்போது நிதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேல்நிலை நீர்தேக்க தொட்டி தமிழகம் முழுவதும் 1299 இடங்களில் ரூ.299 கோடி செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக விரைவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். மக்களின் தேவைகளை அறிந்து தமிழக முதலமைச்சர் சிறந்த முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநர் மஞ்சுளா,

 

ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், செம்பனார்கோயில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், குத்தாலம் ஒன்றியக் குழுத் தலைவர் மகேந்திரன், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை ஒன்றியக் குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, செம்பை ஒன்றிய துணைத் தலைவர் மைனர் பாஸ்கர்,

சீர்காழி நகர் மன்றத் தவைலர் துர்கா பரமேஸ்வரி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுண சங்கரி, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன்,

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குத்தாலம் க.அன்பழகன், பால அருள்செல்வம், எம்.எம்.சித்திக், ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், அமுர்த.விஜயகுமார், மங்கை சங்கர், தரங்க பேரூர் திமுக செயலாளர் முத்துராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயலட்சுமி சுவாமிநாதன், ரெங்கராஜன், கருணாநிதி, ஜெயமாலதி சிவராஜ், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS