BREAKING NEWS

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தரங்கம்பாடி, மே- 03: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் கிராம ஊராட்சி மாஸ் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல்,, ஆகிய ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ பி மகாபாரதி பேசியதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 33,000 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 25,000 வீடுகள் பணிகள் முடிவுற்றும், நடைபெற்றும் வருகின்றன. இதில், 8000 பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்படாமல் உள்ளன. செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் 1942 வீடுகள் பணிகள் தொடங்காமல் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவர்கள் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விரைந்து செயல்பட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும். பாரத பிரதமரின் வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் ஏதேனும் இடையூறுகள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். உடனடியாக நிவர்த்தி செய்து தரப்படும். கட்டுமான பொருள்களுக்கு (மணல், செங்கல்) இடையூறு இருந்தால் அதையும் தெரிவிக்கலாம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கொண்டு வந்த இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், திட்டம் போல வீடு கட்டும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள் தங்களுடைய வீடு கட்டும் பணிகளை உடனடியாக விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முன்னதாக, செம்பனார்கோயில் ஊராட்சியில் ஆக்கூர் கிராம ஊராட்சி, உடையார் கோயில் பத்து கிராமத்தில் நடைபெற்று வரும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், ஆக்கூர் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஒன்றிய பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இணைஇயக்குனர் ஸ்ரீலேகா ,ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குனர் மஞ்சுளா, செம்பனார் கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, மீனா, தரங்கம்பாடி வட்டாட்சியர் காந்திமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரமோகன், செல்வநாயகம், கருணாநிதி, மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜ்கண்ணன், சாந்தி, ஊரக வளர்ச்சித் துறையினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS