BREAKING NEWS

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.

 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி விவசாயிகளின் இடத்தில் இருந்து உமாரக நெல் 200 சுமார் 400 மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலை ரூ. 1,650 க்கும் குறைந் பட்சவிலை ரூ.1,600க்கும் பார்ம் டிரேடிங் முறையில் செம்பனார் கோவில் பொறுப்பாளர் சிலம்பரசன் மயிலாடுதுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் முன்னிலையில் பரிவர்த்தணை செய்யப்பட்டது. 

 

 

இதில் செம்பனார் கோவில் வியபாரி கவி டிரேடர் தினகரனால் இ – நாம் மூலம் அதிக விலை குறிப்பிடப்பட்டு விளை பொருள் கொள்முதல் செய்யப்பட்டது. 

 

 

மேலும் எதிர் வரும்காலங்களில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இல்லத்தில் இருந்தே தேசிய வேளாண் மின்னணு திட்டத்தின் பார்ம் டிரேடிங் மூலம் விற்று பயன் பெறலாம் என நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் தெரிவித்தார்.

 

CATEGORIES
TAGS