செம்பொனார்கோவில் விற்பனை கூடத்தில் இருந்து பருத்தி விற்பனை ஆரம்பம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை ஆரம்பம். செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் கிழமை முதல் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற உள்ளது.
இந்த ஆண்டு விவசாயிகள் செம்பனார் கோவில் பகுதியில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்து உள்ளதால் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பிரதி வாரம் திங்கள் கிழமை காலை 11 மணிக்கும், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மாலை 4 மணிக்கும்,
குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி வாரம் வியாழன் கிழமை மாலை 4 மணிக்கும் பல மாவட்ட, மாநில பருத்தி மில் அதிபர்களும், வணிகர்களும், வியபாரிகளும் கலந்து கொண்டு பருத்தி மறை முக ஏலம் நடை பெற உள்ளதால் விவசாயிகள் தங்களின் விளை பொருளான பருத்தியை எடுத்து வந்து நல்ல விலைக்கு விற்று பயன்பெற வேண்டுமாய் விவசாயிகளுக்கு நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் மற்றும் தனி அலுவலர் சங்கர நாராயணன் அழைப்பு விடுத்துள்ளனர்.