BREAKING NEWS

செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.! 

செயல்பாடாத ஊராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை.! 

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், சேப்பாக்கம் கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து தராததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். 

 

50 ஆண்டு பழைமையான சிதிலமடைந்த நூலக கட்டிடத்தில் ஓராண்டுக்கு முன்னர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். ஆனால் தற்போது வரை இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்காமல் ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. 

 

குறிப்பாக மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியதில் ஊராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு பல வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. 

 

இதனால் குடிநீர் இணைப்பு கிடைக்காத பொதுமக்கள் குடிநீருக்காக அவதி அடைந்து வருகின்றனர்.

 

குடிநீருக்காக ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது, அதுவும் அரை மணி நேரத்திற்கு மேல் வருவதில்லை. 

 

அதேபோல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட மினி டேங்க், கைப்பம்புகள் செயலிழந்து காணப்படுகிறது.

 

தெரு விளக்குகள், பொது இடங்களில் அமைக்கப்பட்ட உயர் கோபுரம் மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளதால் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் சரி செய்ய கோரிக்கை வைத்தும் அவற்றை சரி செய்யாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். 

 

தூய்மை பாரத இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை காவலர்கள் பொதுமக்களிடம் குப்பைகளை பெறாமல் அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

 

அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

 

குண்டும் குழியுமாக இருந்த ஒன்றிய தார் சாலையை சரி செய்யும் வகையில் வண்டல் மண் கொண்டு அவற்றை சரி செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முறையாக அவற்றை சரி செய்யவில்லை எனவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

 

எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஊராட்சி மன்ற நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )