BREAKING NEWS

செய்யாறில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் ஓட்டம்.

செய்யாறில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் ஓட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடரோட்டம் நடைபெற்றது.

 

ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தினை செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு குடியரசு துவக்கி வைத்தார் ஒலிம்பிக் சுடரை பிட் இந்திய அமைப்பின் மாநில நிர்வாகி மதன் ஏற்றி வைத்தார் ஒலிம்பிக் சுடரோட்டம் திருவோத்தூர் வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் இருந்து பெரியார் சிலை வரை நடைபெற்றது.

 

பின்னர் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இந்தோஅமெரிக்கன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒலிம்பிக் சுடர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

 

பெரியார் சிலை முதல் மார்க்கெட் காந்தி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஒலிம்பிக் சுடர் ஊர்வலம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )